06 May 2019

அருமை ரட்சகா கூடிவந்தோம்

கி.கீ:310

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             அருமை ரட்சகா, கூடி வந்தோம்

 

310. (308) பிலஹரி                                                 ரூபகதாளம்

 

                             பல்லவி

 

          அருமை ரட்சகா, கூடிவந்தோம்;-உம

            தன்பின் விருந்தருந்த வந்தோம்.

 

                             அனுபல்லவி

 

                        அறிவுக் கெட்டாத ஆச்சரியமான

                        அன்பை நினைக்க - அருமை

 

                             சரணங்கள்

 

1.         ஆராயும் எமதுள்ளங்களை,-பல

            வாறான நோக்கம் எண்ணங்களைச்

            சீராய்ச் சுத்தமனதாய் உட்கொள்ள நீர்

            திருவருள் கூரும். - அருமை

 

2.         ஜீவ அப்பமும் பானமும் நீர்,-எங்கள்

            தேவையாவும் திருப்தி செய்வீர்;

            கோவே! மா பயபக்தியாய் விருந்து

            கொண்டாட இப்போ. - அருமை

 

3.         உமதன்பின் பிரசன்னம் பெற்றோம்;-உம-து

            ஒளி முகதரிசன முற்றோம்;

            சமாதானம், அன்பு சந்தோஷமும் எமில்

            தங்கச் செய்திடும். - அருமை

 

4.         கிருபை விருந்தின் இந்த ஐக்யம்-பூவில்

            கிடைத் தற்கரிய பெரும் பாக்கியம்;

            அரும் பிரியத்தோ டெங்களை நேசிக்கும்

            குருவே, வந்தனம்! - அருமை

 

5.         எங்கட்காய் உமை ஒப்புவித்தீர்;-கொடும்

            ஈனச் சிலுவையில் மரித்தீர்;

            பொங்கும் பேரன்பை எங்கும் தெரிவிப்போம்,

            புண்ணிய நாதரே! - அருமை

 

6.         பந்திக் கெசமான் நீர் யேசுவே!-எமைச்

            சொந்தமாய் வரவழைத்தீரே;

            உந்தம் கிருபை வல்லமை பெற்றுமக்

            கூழியஞ் செய்ய. - அருமை

 

 

- வே. சந்தியாகு

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...