தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
பசி, தாகத்துடன் வாறேன்
309. (307) தேவகாந்தாரி ஆதி
தாளம்
பல்லவி
தாரகமே,-பசிதாகத்துடன்
உம்மிடம்
வேகத்துடனே வாரேன்.
அனுபல்லவி
சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக்
கென்னிடம்
சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர்.
- தாரகமே
சரணங்கள்
1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப்
பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும்
ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்
சிலுவைதனிலே பகுத்தீர்;
மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று,
சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள.
- தாரகமே
2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை
கண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அது
பேணுதலுடன் பரி பூரண மடைந்திடப்
பேருல குதித்தேனென்றீர்;
வேணுமுமது நீதி பூண, நிறைவா யுன்றன்
மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம்.
- தாரகமே
3. தந்த திருவசனம் உந்தம் இராப்போசனம்
தகமை எத்தனமாமே;-யான்
சிந்தை பணிந்தவற்றை என்றன் மனதுட்கொள்ளத்
தேவசுத்தாவி தாமே;
உந்தம் தசையுதிர விந்தை விருந்தினை யான்
சந்ததமுண்டு துதி சாற்ற அருள் செய்வீரே!
- தாரகமே
-
வே. மாசிலாமணி
Comments
Post a Comment