பண்டிகை கொண்டாடுவோம் ஆம் நாம்


பண்டிகை கொண்டாடுவோம்

387. (384) தோடி                                 சாபு தாளம்

பல்லவி

            பண்டிகை கொண்டாடுவோம்,-ஆம், நாம்
            பண்டிகை கொண்டாடுவோம் .

சரணங்கள்

1.         பண்டிகை கொண்டாடிப்,-பரமனைமன்றாடிப்
            பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி. - பண்டிகை

2.         புன்மைகொடும் பொல்லாப்பு-புளிமா வைவிலக்கி
            உண்மை பரி சுத்தமாம்-உயர்மா வைப்பலுக்கி - பண்டிகை

3.         இன்றுயிர்த்தெ ழுந்தகோன்-இனிமரிப்ப தில்லையே
            பொன்று[1]மர ணஞ்சிறை-பூண்டாள்வ தில்லையே. - பண்டிகை

4.         தரைபவத்திற் கென்றொரு-தரமரித்த னர்சுதன்
            பரனவர்க்கு மகிமையாய்ப்-படிபிழைத் திருக்கிறார். - பண்டிகை

5.         நாதன்போற் பாவத்திற்கு-நாமுமரிப் போமாகாப்
            பேதமின்று யேசுவுக்குப்-பிழைத்திருப் போமாக. - பண்டிகை

6.         கிறிஸ்தடக்கப் பட்டுமா-கீர்த்தியோ டேயெழுந்து
            முறைமரித்த வர்களில்-முதற்பல னானாரே - பண்டிகை

7.         மனுஷனாலு லகினில்-மரணமுண் டானதால்
            மனுஷனாலே யுயிரெழில்-மகிமையுண்டானதே - பண்டிகை

8.         ஆதத்தா லெல்லாரும்-அறமரித்தல் போலவே
            நாதனால் மெய்யாக-நாமுயி ரடைகுவோம். - பண்டிகை

9.         ஆதிபி தாகுமாரன்-ஆவிதிரி யேகர்க்கே
            மாதிரி காலங்களாய்-மாமகிமை யாகவே. - பண்டிகை

- ச.த. ஞானமணி


[1] அழியும்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு