உன்னையன்றி வேறே கெதி


உன்னையன்றி வேறே கதியில்லையே

390. (387) முகாரி                                                     ஆதி தாளம்

பல்லவி

                   உன்னையன்றி வேறே கெதி
                   ஒருவரில்லையெ ஸ்வாமீ!

அனுபல்லவி

            அன்னை தந்தை உற்றார் கற்றார்-ஆருமுதவுவரோ?
            அதிசய மனுவேலா!-ஆசை என் யேசு ஸ்வாமீ! - உன்

சரணங்கள்

1.         பண்ணின துரோகமெல்லாம்-எண்ணினா லெத்தனைகோடி,
            பாதகத்துக் குண்டோ எல்லை,-பரிதவித்தேனே தேடி,
            கண்ணினாலுன் திருவடிக்-காண நான் தகுமோதான்?
            கடையனுக்கருள்புரி-மடியுமுன் யேசு ஸ்வாமீ! - உன்

2.         அஞ்சியஞ்சித் தூர நின்றென-சஞ்சலங்களை நான் சொல்லி,
            அலைகடல் துரும்புபோல்-மலைவு கொண்டே னானையோ!
            கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த-வஞ்சகன் முகம்பாராய்க்
            கிட்டி என்னிடம் சேர்ந்து-க்ருபைவை யேசு ஸ்வாமீ! - உன்

3.         எத்தனை கற்றாலும் தேவ-பக்தியேது மற்ற பாவி;
            எவ்வளவு புத்திகேட்டும்-அவ்வளவுக்கதி தோஷி,
            பித்தனைப் போல பிதற்றிக்-கத்தியே புலம்புமேழைப்
            பேதையைக் கடைத்தேற்றிப்-பிழைக்கவை யேசு ஸ்வாமீ - உன்

4.         கள்ளனாம் கபடனென்னைத்-தள்ளிவிட்டா லாவதென்ன,
            கல்லைப்போல் கடினங்கொண்ட-கர்ம சண்டாளன் பாழும்
            உள்ளமுங்கரைந்தே உன்னறன்-உயர் சிலுவையினன்பால்
            உலையிலிட்ட[1] மெழுகாய்-உருகவை யேசு ஸ்வாமீ! - உன்

- வே.ஜ. பென்யமீன்


[1] நெருப்பிலிட்ட

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு