வாரும் பெத்லகேம் வாரும் வாரும்


வாரும் பெத்லெகேம்

389. (386) சங்கராபரணம்                      ஆதி தாளம்

1.         வாரும், பெத்லகேம் வாரும்,-வாரும்,
            வரிசையுடனே வாரும்;
            வாரும், எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை,
            வாரும், விரைந்து வாரும்.

2.         எட்டி நடந்து வாரும்,-அதோ
            ஏறிட்டு நீர் பாரும்;
            பட்டணம்போல் சிறு பெத்லகேம் தெரியுது,
            பாரும் மகிழ்ந்து பாரும்.

3.         ஆதியிலதமேவை-அந்நாள்
            அருந்திய பாவவினை;
            ஆ! திரித்துவ தே வன் மனிதத்துவ
            மாயினர், இது புதுமை!

4.         விண்ணுலகாதிபதி,-தீர்க்கர்
            விளம்பின சொற்படிக்கு;
            மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்
            மானிடனா யுதித்தார்.

5.         சொல்லுதற் கரிதாமே,-ஜோதி
            சுந்தர சோபனமே;
            புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி
            பூபதிதான் பிறந்தார்.

6.         மந்தை மாடடையில்-மாது
            மரியவள் மடியதனில்,
            கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
            காரணமாய் அணிந்தார்.

7.         தூதர் பறந்துவந்து-தேவ
            துந்துமி மகிழ்பாட,
            மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து
            மங்களமொடு நாட.
- ஐ.த. எலியேசர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு