போற்றும் போற்றும் புண்ணிய


39.     "Praise Him! Praise Him! Jesus our blessed Redeemer"       (208)

1.         போற்றும்! போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
            வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,-
            பாரிலேயும் நாமசங்கீர்த்தனஞ் செய்ய
            மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.
            நேசமேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
            யேசுநாதர் நம்மையும் தாங்குவார்.
            போற்றும்! போற்றும்! தெவகுமாரனைப் போற்றும்!
            பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்.

2.         போற்றும்! போற்றும்! புண்ணியநாதரைப் போற்றும்!
            பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்,
            பாடுபட்டுப் பிராணத தியாகமுமாகி
            வானலோக வாசலைத் திறந்தார்.
            மா கர்த்தாவே! ஸ்தோத்திரம் என்றும் என்றும்!
            வாழ்க, வாழ்க! ஜெகத்து ரட்சகா!
            அருள்நாதா, மாசணுகா பரஞ்சோதி!
            வல்ல தேவா! கருணை நாயகா!

3.         போற்றும்! போற்றும்! புண்ணியநாதரைப் போற்றும்!
            விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்,
            போற்றும்! போற்றும்! மீட்பர் மகத்துவமாக
            ஆட்சி செய்வார் நித்திய காலமும்
            ஏக ராஜா! மாட்சிமையோடு வந்து
            யேசு ஸ்வாமி! பூமியில் ஆளுமேன்!
            லோகமெங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி
            ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்!

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு