18 May 2019

கோடான கோடிக் கணக்கான


38.     'Far, for away, in heathen darkness dwelling?'   (1090)

1.         கோடான கோடிக் கணக்கான மாந்தர்
            ஞானமில்லாமல் மாண்டுபோகிறார்
            மெய்ஞானமுற்ற கூட்டத்தாரில் யாவர்
            தீவிரித்தோடி மீட்பைக் கூறுவார்?

பல்லவி

                        ராஜாதி ராஜன் அவரே!
                        ராஜாதி ராஜன் அவரே!
                        சுவிசேஷங் கூற எங்கும் விரைந்தோடிச்
                        சந்தோஷமாய் செல்வோமே.

2.         பூலோகவாசல் திறவுண்டதெங்கும்;
            தடைகள் யாவும் நீங்கலாயிற்றே.
            தீவிரிப்போம் ஒரே தீர்மானத்தோறும்
            பாவவிநாசங் கூறிக்காட்டவே.

3.         ஏன் சாகுவீர் என்றேசு கேட்கிறாரே;
            ஏன் சாகுவீர் என்றிசைந்துரைப்போம்,
            மன்னுயிர் காக்க ஜீவன் துறந்தாரே,
            சுவ விசேஷம் எங்கும் கூறுவோம்.

4.         தேவாவியால் எத்தேச ஜாதியாரும்
            யேசுவின் பாதம் பணிவார்களாம்.
            கருணைபெற்ற கூட்டத்தாரெல்லாரும்
            ஒப்பற்ற நாமம் பாடுவார்களாம்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...