வருவாரே தாவீதின் மைந்தர்


40.     "He is coming the Man of Sorrows,"   (172)

1.         வருவாரே! தாவீதின் மைந்தர்:
            வெற்றி வேந்தனானார்.
            வானமேகங்கள் மீது வந்து
            அரசாட்சி செய்வார்.

பல்லவி

                      அல்லேலூயா! அல்லேலூயா!
                        வரவே வருவார்!
                        தாசர் யாவரும் புடைசூடி
                        ராஜரீகஞ் செய்வார்.

2.         வருவாரே! தயாள மீட்பர்!
            பாடு பட்டவரே
            சர்வ மாட்சிமை மேன்மையோடும்
            ஆளுவார் என்றுமே.

3.         வருவாரே! அனாதி தேவன்;
            ராஜா! வாழ்க! என்போம்.
            அருள்ஜோதி ப்ரகாசம் வீச,
            போற்றி வணங்குவோம்.

4.         வருவாரே! சபாபதி;
            பக்தர் யாவரையும்
            நானா திசையினின்று கூட்டி,
            சேர்த்து வாழ்விக்கவும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு