18 May 2019

நல்லசெய்தி இயேசுவை


53.     'We have heard the joyful sound Jesus saves'   (1079)

1.         நல்லசெய்தி! யேசுவை
            நோக்கிப்பார்! ரட்சிப்பார்!
            நம்பிவந்து, அவரை
            நோக்கிப்பார், ரட்சிப்பார்!
            எந்தப் பாவியாயினும்
            தள்ளமாட்டேன் என்கிறார்.
            துரோகஞ் செய்தபோதிலும்
            நோக்கிப்பார்! ரட்சிப்பார்!

2.         எங்கும் செய்தி சொல்லுவோம்,
            நோக்கிப்பார்! ரட்சிப்பார்!
            தேசா தேசம் கூறுவோம்
            நோக்கிப்பார்! ரட்சிப்பார்!
            எந்த நாடு தீவிலும்
            யேசு காத்து நிற்கிறார்.
            மூடன் நீசன் ஆகிலும்
            நோக்கிப்பார்! ரட்சிப்பார்!

3.         இன்னும் கேள்! மா நேசராம்
            யேசுவே காக்கிறார்.
            நம்பும் பக்தரையெல்லாம்
            காக்கிறார்! காக்கிறார்!
            சற்றும் தவறாமலும்
            கையில் ஏந்திக்கொள்ளுவார்,
            கேடுபாடில்லாமலும்
            காக்கிறார்! காக்கிறார்.

4.         சுவிசேஷம் இதுவே!
            காக்கிறார்! காக்கிறார்!
            பாவம் நீங்கி, பின்னுமே
            காக்கிறார்! காக்கிறார்!
            மோட்சம் சேருமளவும்
            தாங்கிக்கொண்டே இருப்பார்.
            தீமையைச் செய்யாமலும்
            காக்கிறார்! காக்கிறார்!

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...