18 May 2019

என் அருமை ரட்சகா கண்ணோக்குமேன்


54.     “Lord Jesus, I long to be perfectly whole” (569)

1.         என் அருமை ரட்சகா! கண்ணோக்குமேன்!
            சம்பூர்ண ரட்சிப்பை நாடுகிறேன்.
            என் பாவங்கள் யாவையும் வெறுக்கிறேன்.
            நீர் கழுவும்! முழுதும் வெண்மையாவேன்.

பல்லவி

                   வெண்மையாவேன்!
                        நான் வெண்மையாவேன்!
                        நீர் கழுவும்! முழுவதும் வெண்மையாவேன்.

2.         என் அருமை ரட்சகா! இரங்குவீர்!
            எப்பாவமும் நீங்கச் சுத்தாங்கம் செய்வீர்.
            உம் ரத்தமே கதி என்றண்டிக்கொண்டேன்.
            நீர் கழுவும்! முழுதும் வெண்மையாவேன்.

3.         என் அருமை ரட்சகா! முழுதுமாய்
            வீண் கிரீயைகள் ஒழித்து, நம்பிக்கையாய்
            நற்பாதகத்தில் எந்தனைப் படைக்கிறேன்.
            நீர் கழுவும்! முழுதும் வெண்மையாவேன்.

4.         என் அருமை ரட்சகா தள்ளமாட்டீர்.
            துர்குணத்தை மாற்றியே புதுப்பிப்பீர்.
            எப்போதும் காப்பாற்றுவீர்! நம்புகிறேன்!
            நீர் கழுவும்! முழுதும் வெண்மையாவேன்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...