கெட்டுப்போன மாந்தரை


52.     “Sinners Jesus will receive”  (390)

1.         கெட்டுப்போன மாந்தரை
            யேசு ஏற்றுக்கொள்ளுவார்.
            பாவ ஆத்துமாக்களை
            குணமாக்கி ரட்சிப்பார்.

பல்லவி

                        நல்ல செய்தி! கேளுமேன்!
                        யேசு ஏற்றுக்கொள்ளுவார்
                        நம்பி வாரும்! வாருமேன்.
                        தள்ளிப்போடவே மாட்டார்!

2.         “இளைப்பாறல் தருவேன்,
            நம்பி வாரும்” என்கிறார்,
            யாரானுலும் வாருமேன்!
            பாவப் பாரம் நீக்குவார்.

3.         மாசில்லாத ரத்தத்தால்
            சர்வ சுத்தமாக்குவார்.
            வல்ல தூய ஆவியால்
            தீய ஸ்பாவம் மாற்றுவார்.

4.         இந்த ஏற்ற நேரத்தில்
            வந்து சேரக்கடவீர்
            புண்ணிய நாதர் பாதத்தில்
            மீட்பும் வாழ்வும் பெறுவீர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு