அதோ ஓர் ஜீவ வாசலே


1.         'There is a gate that stands ajar!'  (372)

1.         அதோ! ஓர் ஜீவ வாசலே!
            அவ்வாசலில் ஓர் ஜோதி
            எப்போதும் வீசுகின்றதே,
                        மங்காத அருள் ஜோதி.

பல்லவி

                        ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!
                        அவ்வாசல் திறவுண்டதே
                        பாரேன்! பாரேன்!
                        பார்! திறவுண்டதே.

2.         அவ்வாசலில் ப்ரவேசிப்போர்
            கண்டடைவார் மெய்வாழ்வும்;
            கீழோர், மேலோர், இல்லோர், உள்ளோர்,
            எத்தேச ஜாதியாரும்.

3.         அஞ்சாமல் அண்டிச் சேருவோம்;
            அவ்வாசலில் உட்செல்வோம்;
            எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்
            கர்த்தாவைத் துதி செய்வோம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு