வா நீச பாவி வா


2.         'I here Thy welcome voice'                        (475)

1.         வா! நீச பாவி! வா,
            என்றென்னைக் கூப்பிட்டீர்;
            என் தோஷம் தீர, ரக்ஷகா!
            சுத்தாங்கம் பண்ணுவீர்.

பல்லவி

                        அருள் நாயகா!
                        நம்பி வந்தேனே
                        தூய திரு ரத்தத்தால்
                        சுத்தாங்கம் பண்ணுமே,

2.         சீர் கெட்ட பாவி நான்
            என் நீதி கந்தையே
            என்றாலும் உமதருளால்
            துர்க்குணம் மாறுமே.

3.         மெய்ப் பக்தி பூரணம்
            தேவாவியாலுண்டாம்
            உள்ளான சமாதானமும்
            நற்சீறும் பெறலாம்.

4.         உண்டான நன்மையை
            நீர் விர்த்தியாக்குவீர்,
            இப்பாவ குணத் தன்மையை
            நிக்ரகம் பண்ணுவீர்.

5.         ஆ! தூய ரத்தமே!
            ஆ! அருள் நாயகா!
            ஆ! கிருபா விசேஷமே!
            ஆ! லோக ரக்ஷகா!

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு