மெய் ராஜா கிறிஸ்துநாதர்
33. 'Our Lord
is now rejected' (176)
1. மெய் ராஜா
கிறிஸ்துநாதர்
மா தயை காட்டவும்,
சண்டாள மாந்தராலே
தள்ளுண்டபோதிலும்,
வந்தரசாளும் காலம்
சமீபமாயிற்றே!
ராஜரீக நல்ல காலம் வருமே.
பல்லவி
ராஜரீக நல்ல காலம் வருமே.
சமீபமாயிற்றே!
யேசு மாட்சி மேன்மையோடு
ப்ரசன்னமாகவே,
ஜோதி காட்சி கண்டு பூத்த
கண் யாவும் குளிரும்,
ராஜரீக நல்ல காலம் வரட்டும்!
2. விண் ஜோதி தோன்றி வீச,
மெய் தேவபக்தரும்
கெம்பீர கோலத்தோடு
கொண்டாட்டஞ் செய்யவும்,
நல்மீட்பர் மாண்பைப் பார்த்து
கண் யாவும் குளிரும்
ராஜரீக நல்ல காலம் வரட்டும்!
3. எப்பாடும் நோவும் இன்றி
ஆனந்தம் அடைவோம்.
மாசற்ற நெஞ்சத்தோடு
ஓயாமல் போற்றுவோம்.
மா ராஜா சன்னிதானம்
நின்றாட்சி செய்யவும்.
ராஜரீக நல்ல காலம் வரட்டும்!
4. மெய்வாழ்வின் காலம் வர
ப்ரயாசப்படுவோம்
நன்னெறி தவறாமல்
முன்சென்று தேறுவோம்.
தீயோரும் குணமாற
எப்போதும் முயல்வோம்.
ராஜரீக நல்ல காலம் நோக்குவோம்!
Comments
Post a Comment