சீர்பெறாமல் திக்கில்லாமல்
32. 'Lone
and weary sad and dreary" (481)
1. சீர்பெறாமல்,
திக்கில்லாமல்,
யேசுவண்டை சேருவேன்,
ஆவலோடும், ஆசையோடும்,
திருப்பாதம் அண்டுவேன்.
பல்லவி
அண்டினேனே! அண்டினேனே!
ஆசீர்வாதம் தாருமேன்,
அண்டினேனே! அண்டினேனே!
ஆற்றித் தேற்றிக் காருமேன்.
2. தயவாக, நேசமாக
சீரைத் தந்து ரக்ஷிப்பீர்,
பாவத்தீங்கும் தூர நீங்கும்,
சர்வ சுத்தியாக்குவீர்.
3. குணம் மாற, நெஞ்சம் ஆற
பரவசமாகுவேன்.
கரையேறி, மோக்ஷஞ்சேர்ந்து,
ஊழிகாலம் வாழுவேன்.
4. அருள் தாரும், பாதுகாரும்
மாசு மருவின்றியே
வாழ்விலேயும் தாழ்விலேயும்
தாங்கிவாரும் நாயனே!
Comments
Post a Comment