மெய்த்தேவனைத் துதி பெரு நன்மை

மெய்த்தேவனைத் துதி பெரு நன்மை-1

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

1. மெய்த்தேவனைத் துதி; பெரு நன்மை செய்தார்

குமாரனைத் தந்துன்னையே நேசித்தார்.

உன் பாவத்துக்காய் யேசுவே மரித்தார்.

நீ மோட்சத்தில் சேர ஆருயிர் தந்தார்.

 

பல்லவி

 

போற்றுவோம்! போற்றுவோம்! ஜீவநாயவர்

நம்புவோம்: நம்புவோம்! லோக ரக்ஷகரை.

யேசுவின் மூலம் நற்கதியுண்டாம்.

பிதாவின் சமுகம் கண்டடையலாம்.

 

2. சம்பூரண மீட்பைச் சம்பாதித்தனர்.

தம் வாக்கை அன்பருக் கருள்வேன் என

எப்பாவியானாலும் விஸ்வாசம் வைத்தால்

அந்நேரமே மன்னிப் புண்டாம் யேசுவால்.

போற்றுவோம் மி.

 

3. உன்னதமான பெரும்வாழ்வை ஈந்தார்

உன்னதங்களில் அமர்ந்திட செய்தார்

உம்அன்பை நான் என்றும் எண்ணித் துதிப்பேன்

உம் மாட்சி முகம் கண்டு ஆனந்திப்பேன்

போற்றுவோம் மி.

 

4. அதிசயமான அன்பின் பெருக்கே

யேசுவினால் வரும் மகிழ்ச்சியே

அந்நாளில் யேசுவை நான் பார்க்கும்போது

உண்டாகும் மகிழ்ச்சிக்கு வரம்புண்டோ

போற்றுவோம் மி.

 

5. பேரன்பின் சொரூபி! மெய்த் தாசருக்கே

ஒப்பற்ற சந்தோஷத்தை அளித்தீரே.

ஆனாலும் பேரின்பத்திற் சேரும் போதோ

உண்டாகும் சந்துஷ்டிக்கு வரம்புண்டோ?

போற்றுவோம் மி,

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே