18 October 2018

கர்த்தாவே நாங்கள் நெஞ்சத்தில்


144. Erk, Sinai                        (398) 8, 7, 8, 7, 8, 8, 7.

"Wir Menschen sind zu dem, O Gott"

1.         கர்த்தாவே, நாங்கள் நெஞ்சத்தில்
                        மெய்ஞ் ஞானமற்ற மாந்தர்;
            நீர் புத்தியைத் தராவிடில்,
                        எப்போதும் புத்தியீனர்;
            உம்மால் உண்டான வேதமும்
            நீர் ஈயும் தூய ஆவியும்
                        நற்பாதை காட்டவேண்டும்.

2.         வேதத்துக்காக ஸ்தோத்திரம்
                        உமக்குண்டாவதாக!
            தெய்வீக வார்த்தையைத் தினம்
                        எல்லாரும் பக்தியாக
            ஆராய்ந்து பார்த்துச் சிந்தித்து
                        கைக்கொள்ள நீர் கடாட்சித்து
            நல்லாவியை அளியும்.

3.         பிதாவே எங்கும் உமது
                        நல் வார்த்தை செல்வதாக;
            ஆ! யேசுவே, நீர் காட்டிய
                        வழியில் போவோமாக!
            தேவாவி, எங்கள் உள்ளத்தில்
                        இறங்கி, வேதத்தால் அதில்
            நற்சீர் அளிப்பீராக!

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...