31 October 2018

காரிருளில் என் நேச தீபமே


311. Sandon                                                   10, 4, 10, 4, 10, 10.

"Lead, kindly light, amidth..."

1.         காரிருளில் என் நேச தீபமே,
                        நடத்துமேன்;
            வேறொளியில்லை, வீடும் தூரமே,
                        நடத்துமேன்;
            நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்
            ஓர் அடி மட்டும்
                        என் முன் காட்டுமேன்.

2.         என் இஷ்டப்படி நடந்தேன், ஐயோ!
                        முன்னாளிலே
            ஒத்தாசை தேடவில்லை; இப்போதோ
                        நடத்துமே;
            உல்லாசம் நாடினேன், திகிலிலும்
            வீம்பு கொண்டேன்,
                        அன்பாக மன்னியும்.

3.         இம்மட்டும் என்னை ஆசீர்வதித்தீர்;
                        இனிமேலும்
            காடாறு சேறு குன்றில் தேவரீர்
                        நடத்திடும்;
            உதய நேரம் வர, களிப்பேன்;
            மறைந்துபோன
                        நேசரைக் காண்பேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...