30 October 2018

என் ஜீவன் கிறிஸ்து தாமே


285. St. Alphege                                                                   7s, 6s.

"Christus, der ist mein Laben"

1.         என் ஜீவன் கிறிஸ்து தாமே,
                        அதாலே எனக்கு
            என் சாவாதாயமாமே;
                        நெஞ்சே, மகிழ்ந்திரு.

2.         நான் இயேசு வசமாக
                        சேர்ந்தென்றும் வாழவே,
            மகா மகிழ்ச்சியாக
                        பிரிந்து போவேனே.

3.         பாடற்றுபோம், அந்நாளே
                        என் நோவும் முடியும்;
            என் மீட்பர் புண்யத்தாலே
                        மெய் வாழ்வு தொடங்கும்.

4.         நான் பேச்சு மூச்சில்லாமல்
                        குளிர்ந்து போகச்சே
            என் ஆவியைத் தள்ளாமல்
                        கண்ணோக்கும், கர்த்தரே.

5.         அப்போது நான் அமர்ந்து,
                        கலக்கம் இன்றியே
            நான் நித்திரை அடைந்து
                        சுகிப்பேன் யேசுவே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...