27 October 2018

ஜெயித்த இயேசு நாதர் தாம்


238. Shropshire, Redhead 90                L.M.

"Victory"

1.         ஜெயித்த யேசு நாதர் தாம்
            சம்பாதித்த மெய் ஆஸ்தியாம்
            சாகாத ஜீவன் பூரிப்பும்
            நமக்கென்றைக்கும் கிடைக்கும்.

2.         பயமும் நோவும் யேசுவால்
            முற்றும் விலகிப் போவதால்
            சந்தோஷமாய் போராடுவோம்,
            அவரால் வெற்றி கொள்ளுவோம்.

3.         சா மட்டும் நிலைநின்றவன்,
            போராட்டம் செய்து வென்றவன்
            வானோரின் சங்கம் சேருவான்;
            தன் மீட்பரோடு வாழுவான்.

4.         வெற்றி சிறந்த தேவரீர்
            ஜெயிக்கப் பாதை காண்பித்தீர்;
            நீர் வென்ற வண்ணம் நாங்களும்
            வென்றேறத் தயை அருளும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...