சங்கம் கூடி ஏழைக்கென்று
255. Beecher, Benediction.
Austria 8s,
7s, 8l.
"A cheerful giver"
1. சங்கம் கூடி ஏழைக்கென்று
நல் விவேகத்துடனே
அறஞ் செய்யும் குணம் நன்று
அதைத் தாரும்,
தேவனே;
ஆஸ்தியுள்ளவர்கள் வந்து
மா உதாரத்துடனே
ஏழைகள் மேல் தயை வைத்து
நன்மை செய்ய ஏவுமே.
2. நேசம்
காட்டி ஓர் விதவை
நல்ல மனதுடனே
எளிமையில் போட்ட காசை
மேன்மையாய்ப்
புகழ்ந்தீரே;
தேவனே, உம்மாலே நாங்கள்
நன்றாய்க் காக்கப்பட்டோமே
இம்மைக்கேற்ற பாக்கியங்கள்
உம்மால் பெற்றுக்
கொண்டோமே.
3. நாதா,
நீர் பொழிந்த அருள்
நாங்கள் எண்ணி,
அவ்வாறே
எங்கள் சொந்தமான பொருள்
வறியோர்க்கு ஈயவே
தேவரீருக்கேற்றதான
தர்ம சிந்தை நிறைவாய்
எங்களுக்கிப் போதுண்டாக
ஏதும் மா கடாட்சமாய்.
Comments
Post a Comment