பரம சேனைக்கும் பூலோகத்தாருக்கும்


260. Moscow 

Italian Hymn           (420)      6, 6, 4, 6, 6, 6, 4.

"Supplication"

1.         பரம சேனைக்கும்
            பூலோகத்தாருக்கும்
                        ஆண்டவரே,
            அன்பு நிறைந்தவர்,
            இரக்கமுள்ளவர்
            கிருபை செய்பவர்
                        தேவரீரே.

2.         உம் மகிமைக்கென்றே
            இவ்வாலயத்தையே
                        காணிக்கையாய்
            படைக்கக் கூடினோம்,
            ப்ரதிஷ்டை செய்கிறோம்,
            கொண்டாடிட நிற்கிறோம்,
                        ஆனந்தமாய்.

3.         உயர்ந்த வானமும்
            விசால பூமியும்
                        நிறைக்கும் நீர்
            தயவைக் காண்பிக்க,
            சபையைக் காண்பிக்க,
            இங்கே ப்ரகாசிக்க,
                        வந்தருள்வீர்.

4.         குருக்கள் ஜனங்கள்
            செலுத்தும் ஜெபங்கள்
                        மா தயவாய்
            இங்கே கேட்டருளும்,
            கிருபை காண்பியும்,
            கெட்டோரை ரட்சியும்,
                        வல்லமையாய்.

5.         அப்போது இங்கேயும்
            பின் மோட்ச வீட்டிலும்
                        உமக்கென்றே
            கனமுந் துதியும்
            அன்புடன் நன்றியும்
            என்றென்றும் எழும்பும்,
                        ஆண்டவரே.


Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே