மா தூய ஆவி இறங்கும்


244. Veni Creator (I)                   L.M.

"Come, Holy ghost, our souls..."

1.         மா தூய ஆவி, இறங்கும்,
            விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்;
            ஞானாபிஷேகமான நீர்
            நல் வரம் ஏழும் ஈகிறீர்.

2.         மெய் ஜீவன், ஆறுதல், அன்பும்
            நீர் வார்க்கும் வான தைலமே;
            உம் ஜோதி வீசி நித்தமும்
            ஆன்மாவின் மருள் அகற்றும்.

3.         துன்புற்ற நெஞ்சைத் தேற்றவே
            ஏராள அருள் பெய்யுமே;
            மாற்றார் வராமல் ரட்சியும்;
            சீர், வாழ்வு சுகம் ஈந்திடும்.

4.         பிதா குமாரனோடு நீர்
            திரியேகரா யிருக்கிறீர்
            என்றே அறிந்து யாவரும்
            பணிந்து போற்றப் போதியும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே