30 October 2018

தயை நிறைந்த தேவனே


258. Melcombe                             L.M.

"Bountiful harvests"

1.         தயை நிறைந்த தேவனே,
            அறுப்புக் காலம் உம்மையே
            துதித்துப் போற்றிப் பாடுவோம்,
            நீர் செய்த நன்றி சொல்லுவோம்.

2.         முன் மாரியும் பின் மாரியும்
            அளித்து மா அன்பாகவும்
            நிலத்தில் போட்ட வித்தை நீர்
            நிறைந்த பலன் ஆக்கினீர்.

3.         விளைச்சலை நீர் தந்ததால்
            நாடெங்கும் மா மகிழ்ச்சியால்
            நிரம்பித் தேவரீருக்கு
            சங்கீதம் பாடுகின்றது.

4.         வயல் விளைந்த வண்ணமே
            நல்வார்த்தை எங்கள் நெஞ்சிலே
            பலித்து நற்கனிகளும்
            கொடுக்க அருள் ஈந்திடும்.

5.         கடைசி நாள் அறுப்புக்கே
            தூதர்கள் வரும்பொழுதே
            எல்லாரும் ஆயத்தமாகவே
            இருக்கப்பண்ணும், கர்த்தரே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...