யாரிலும் மேலான அன்பர்
303. Caritas 8,
4, 8, 4, 8, 8, 4.
"O, how He lovel"
1. யாரிலும்
மேலான அன்பர்
மா
நேசரே;
தாயைப் பார்க்க நல்ல நண்பர்
மா
நேசரே;
மற்ற நேசர் விட்டுப் போவார்,
நேசித்தாலுங் கோபங் கொள்வார்
யேசுவோ என்றென்றும் விடார்,
மா
நேசரே!
2. என்னைத் தேடிச் சுத்தஞ் செய்தார்
மா
நேசரே!
பற்றிக் கொண்ட என்னை விடார்,
மா
நேசரே;
இன்றும் என்றும் பாதுகாப்பார்,
பற்றினோரை மீட்டுக் கொள்வார்,
துன்ப நாளில் தேற்றல் செய்வார்,
மா
நேசரே!
3. நெஞ்சமே நீ த்யானம் பண்ணு
மா
நேசரை;
என்றுமே விடாமல் எண்ணு
மா
நேசரை;
எந்தத் துன்பம் வந்தும், நில்லு,
நேரே மோட்ச பாதை செல்லு
யேசுவாலே யாவும் வெல்லு;
மா
நேசரே!
4. என்றென்றைக்கும் கீர்த்தி சொல்வோம்;
மா
நேசரே!
சோர்வுற்றாலும் வீரங்கொள்வோம்;
மா
நேசரே!
கொண்ட நோக்கம் சித்தி செய்வார்,
நம்மை அவர் சேர்த்துக் கொள்வார்
மோட்ச நன்மை யாவும் ஈவார்;
மா
நேசரே!
Comments
Post a Comment