25 October 2018

என் மீட்பர் ரத்தம் சிந்தினார்


210. Credo, Solid Rock                    8s, 6l.

"My hope is built on nothing..."

1.         என் மீட்பர் ரத்தம் சிந்தினார்
            மா நீதியும் சம்பாதித்தார்;
            என் சொந்த நீதி வெறுத்தேன்,
            யேசுவின் நாமம் நம்புவேன்;
            நான் நிற்கும்பாறை க்றிஸ்துதான்
            வேறஸ்திபாரம் மணல்தான்.

2.         கார் மேகம் அவர் முகத்தை
            மறைக்கும் காலம் அவரை
            எப்போதும் போல நம்புவேன்
            மாறாதவர் என்றறிவேன்
            நான் நிற்கும்பாறை க்றிஸ்துதான்
            வேறஸ்திபாரம் மணல்தான்.

3.         மரண வெள்ளம் பொங்கினும்
            என் மாம்சம் சோர்ந்து போயினும்
            உம் வாக்குத்தத்தம் ஆணையும்,
            என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்,
            நான் நிற்கும்பாறை க்றிஸ்துதான்
            வேறஸ்திபாரம் மணல்தான்.

4.         நியாயத் தீர்ப்புக் காலத்தில்
            எக்காளச் சத்தம் கேட்கையில்
            அஞ்சேன், என் மீட்பர் நீதியே
            அநீத னென்னை மூடுமே;
            நான் நிற்கும்பாறை க்றிஸ்துதான்
            வேறஸ்திபாரம் மணல்தான்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...