உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும்


317. Laudamus te 

Lobe den Herren           (432)   14, 14, 4, 7.

1.         உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும்
                   வல்ல பிதாவே;
            உம்மைப் பணிகிறோம், ஸ்வாமி,
                        ராஜாதி ராஜாவே; உமது
            மா - மகிமைக்காக, கர்த்தா
            ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.

2.         கிறிஸ்தே, இரங்கும்; குமாரனே,
                        கடன் செலுத்தி,
            லோகத்தின் பாவத்தை நீக்கிற
                        தேவாட்டுக்குட்டி,
            எங்கள் மனு - கேளும்; பிதாவினது
                        ஆசனத் தோழா, இரங்கும்.

3.         நித்ய பிதாவின் மகிமையில்,
                        இயேசுவே நீரே,
            பரிசுத்தாவியோ டேகமாய்
                        ஆளுகிறீரே.
            ஏகமாய் நீர் அர்ச்சிக்கப் படுகிறீர்.
                        உன்னத கர்த்தரே. ஆமேன்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே