காரிருளால் மூடப்பட்ட


264. Regent square 

Dismissal                                          8, 7, 8, 7, 4, 7.

"O'er the gloomy hills of darkness"

1.         காரிருளால் மூடப்பட்ட
                        பர்வதங்கள் மேலே பார்;
            வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
                        ஜோதி தோன்றச் செய்கிறார்;
                                    அதற்காக
                        நெஞ்சமே, மகிழ்ச்சி கொள்.

2.         கல்வாரியில் பட்டபாட்டை
                        எண்ணி, மானிடர்களில்
            அன்பு வைத்து மா ரட்சிப்பை
                        செய்து மோட்ச மார்க்கத்தில்
                                    முன் நடந்து,
                        மோட்சத்தை சம்பாதித்தீர்.

3.         அதைத் தேசத்தார் எல்லாரும்
                        காணச் செய்யும், கர்த்தரே;
            அந்தகாரமுள்ள யாரும்
                        அதால் சீராவார்களே
                                    நீர் சகித்த
                        சாவின் பலன் அதுவே.

4.         இப்போ லட்ச லட்சமான
                        பேர்கள் அருள் பெற்றது
            உம்முடைய உண்மையான
                        அன்பினாலே ஆயிற்று;
                                    அதற்காக
                        உமக்கே மா ஸ்தோத்திரம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு