ஆ சகோதரர் ஒன்றாய்


240. Lubeck, Cyprus                              7s.

"Sieh, Wie lieblich und wie fein"

1.         ஆ, சகோதரர் ஒன்றாய்
            ஏகமான சிந்தையாய்
            சஞ்சரித்தல், எத்தனை
            நேர்த்தியான இனிமை.

2.         அது ஆரோன் சிரசில்
            வார்த்துக் கீழ் வடிகையில்,
            கந்தம் வீசும் எண்ணெய்க்கு
            ஒத்ததாய் இருக்குது.

3.         அது எர்மோன் மேலேயும்
            சீயோன் மேடுகளிலும்
            பெய்கிற ஆகாசத்து
            நற் பணிக்கு ஒத்தது.

4.         விண்ணில் ஆளும் சிரசே,
            பிரிவினை நீக்கியே
            க்றிஸ்தவர் எல்லாரையும்
            நீர் ஒன்றாக்கியருளும்.

5.         மேய்ப்பரே, நீர் ஐக்யத்தை
            ஈந்து சிதறுண்டதை
            ஏக மந்தையாகவும்
            சேர்த்தணைத்துக் கொண்டிரும்.

6.         நீரே நெஞ்சை நெஞ்சுடன்
            கட்டி நேசத்தின் பலன்
            நன்மை தின்மை நாளிலும்
            தோன்றக் கட்டளையிடும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே