அபிஷேகம் பெற்ற சீஷர்


241. Stuttgart                         8s, 7s.

"Go ye therefore, and teach all..."

1.         அபிஷேகம் பெற்ற சீஷர்
                        தேவ வாக்கைக் கூறினார்;
            கட்டளை கொடுத்த மீட்பர்
                        “கூட இருப்பேன்” என்றார்.

2.         யேசுவே, நீர் சொன்ன வண்ணம்
                        ஏழை அடியாருக்கே
            ஊக்கம் தந்து நல்ல எண்ணம்
                        சித்தியாகச் செய்வீரே.

3.         முத்திரிக்கப்பட்ட யாரும்
                        ஆவியால் நிறைந்தோராய்
            வாக்கைக் கூற வரந்தாரும்,
                        அனல் மூட்டும் தயவாய்.

4.         வாக்குத் தத்தம் நிறைவேற
                        சர்வ தேசத்தார்களும்
            உம்தன் பாதம் வந்துசேர
                        அனுக்ரகம் செய்திடும்.

5.         பிதா, சுதன், சுத்த ஆவி
                        என்னுந் தேவரீருக்கே
            தோத்திரம், புகழ்ச்சி, கீர்த்தி
                        விண் மண்ணில் உண்டாகுமே!

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே