பட்டப்பகல் போலவே


266. German Hymn (Pleyel's)              7s.

"Light of day"

1.         பட்டப்பகல் போலவே
            இருள் யாவும் நீங்கவே,
            மீட்பரே, நீர் எழும்பும்,
            லோகம் எங்கும் ஆண்டிடும்.

2.         அன்பின் ராஜ்ஜியம் எங்கும்
            பரவச் செய்தருளும்;
            எல்லாப் பொய் மதங்களும்
            நாசமாகச் செய்திடும்.
           
3.         யூதர், புறச் சாதியார்
            சேர்ந்து உம்மைப் பணிவார்;
            பூமி எல்லாம் உம்மையே
            போற்றித் தொண்டு செய்யுமே.

4.         சத்ய சுவிசேஷத்தை
            அனுப்பி இப்பூமியை
            எல்லாம் சொந்தமாகவே
            ஆண்டுகொள்ளும் யேசுவே

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே