27 October 2018

விண் மண் அனைத்தையும்


235. Croft's 148th, Cephas 

Bevan.                        (415)   6, 6, 6, 6, 8, 8.

"Monarche aller Ding"

1.         விண், மண் அனைத்தையும்
                        படைத்த கர்த்தாவே
            வானோர்க் குழாங்களும்
                        பணியும் ராஜாவே
            என் எளிமையில் என்னை நீர்
            அன்பாய்க் கண்ணோக்கக் கடவீர்.

2.         சர்வ சம்பூரணா
                        ஒப்பற்ற தேவரீர்
            இவ்வேழைப் பாவிக்காய்
                        அன்பாய் இரங்கினீர்?
            அடியேனைப் பிதாவாம் நீர்
            உம்மண்டைக்கே அழைக்கிறீர்.

3.         நீர் அஸ்தமிப்பில்லா
                        மா சூர்யனானவர்
            இருளிலே மங்கா
                        வெளிச்சம் தந்தவர்,
            அடியேன் ஆத்துமாவிலும்
            ப்ரகாசத்தைத் தந்தருளும்.

4.         அன்பின் சொரூபி உம்
                        ஒப்பற்ற நேசமே
            விண்ணோரின் உள்ளமும்
                        களிக்கச் செய்யுமே;
            அதே என் இதயத்திலும்
            நிரம்பப் பண்ணி அருளும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...