சாந்தமுள்ள இயேசுவே


302. Dijon, Innocents.             7s.

"Gentle Jeus, meek and mild"

1.         சாந்தமுள்ள யேசுவே,
            பாலன் முகம் பாருமே;
            என்னில் தயை கூருமேன்
            என் உள்ளத்தில் தங்குமேன்.

2.         உம்மை நாடிப் பற்றுவேன்,
            என்னை ஏற்றுக் கொள்ளுமேன்;
            மோட்ச ராஜ்ஜியத்திலே
            எனக்கிடம் தாருமே.

3.         இன்ப முகம் காட்டுவீர்;
            என்னைக் கையில் ஏந்துவீர்;
            உமக்கேற்றோன் ஆகவே
            சுத்தம் பண்ணும், யேசுவே.

4.         தீயோர் செய்கையொன்றுமே
            நான் செய்யாதிருக்கவே
            என்னை ஆண்டு நடத்தும்
            என்னில் வாசமாயிரும்.

5.         ஆ, அன்புள்ள யேசுவே,
            அடியேனைப் பாருமே,
            என்னை அன்பாய் ரட்சியும்
            மோட்ச பாக்யம் அருளும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே