30 October 2018

மோட்ச மண்டலத்திலுள்ள


287. Unser Herrscher, 

Triumph                                        8s, 7s, 6l.

"Meines Lebens be to Freude"

1.         மோட்ச மண்டலத்திலுள்ள
                      மாட்சிமை என் பாக்யம்;
            க்றிஸ்து என்னும் நேசமுள்ள
                        ரட்சகர் என் பொக்கிஷம்;
                                    மோட்ச லோக
                        நன்மையே என் ஆறுதல்.

2.         மானிடர் மண்ணாஸ்தியாலே
                        தங்களைத் தேற்றட்டுமேன்
            நான் என் நெஞ்சை யேசுவாலே
                        தேற்றி விண்ணை நோக்குவேன்
                                    ஆஸ்தி போகும்.
                        நிரோ என்றும் நிற்கிறீர்.

3.         க்றிஸ்துவால் எனக்குயர்ந்த
                        ஆஸ்திகள் உண்டாயிற்று,
            விக்கினங்களால் நிறைந்த
                        லோக ஆஸ்தி எதுக்கு?
                                    க்றிஸ்து நாதா
                        என்றுமுள்ள பொக்கிஷம்.

4.         அந்த மோட்ச மண்டலத்தில்
                        நான் என் பங்கடையவே
            நீர்தான் இவ்வனாந்தரத்தில்
                        நீங்கிடாச் சகாயரே;
                                    நான் என்றைக்கும்
                        உம்முடன் இருப்பேனே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...