31 October 2018

ஆ வானம் பூமி யாவையும்

ஞாபா:316

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

316. Duke St. St. Ambrose                                                    L.M.

 

"Dedication of a new house"

 

1.       ஆ, வானம் பூமி யாவையும்

            அமைத்து ஆளும் கர்த்தரே

            உமது ஞானம், சத்தியம்

            அளவில் அடங்காததே.

 

2.         உமக்கு வானம் ஆசனம்,

            பூதலம் பாதப் படியாம்;

            எங்களுக்கு இருப்பிடம்

            கிடைத்தது மா தயையாம்.

 

3.         இவ்வீட்டில் நாங்கள் வசித்து

            பக்தியோடும்மைப்போற்றுவோம்

            இடைவிடாமல் துதித்து,

            கொண்டாடித்தாழ்ந்து சேவிப்போம்.

 

4.         இங்கே இருக்கும் நாள் மட்டும்

            உற்சாகத்தோடு உமக்கே

            அடங்கி நாங்கள் நடக்கும்

            குணத்தை தாரும்; கர்த்தரே.

 

5.         ஜீவன் பிரியும் நேரத்தில்

            உம்மண்டை வந்து சேரவும்

            முடிவில்லாத இன்பத்தில்

            நற்பங்கடையவும் செய்யும்.

 

6.         இகத்திலும், பரத்திலும்,

            செங்கோல் செலுத்தும் நாதரே,

            உமக்கு நித்ய காலமும்

            துதி உண்டாவதாகவே!

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...