30 October 2018

மெய் ஒளியான இயேசுவே


270. Breslau, Melcombe                    L.M.

"O Jesu Christe, Wahres licht"

1.         மெய் ஒளியான யேசுவே,
            இருளிலுள்ளோர் பேரிலே
            இரங்கி, மாந்தர் யாருக்கும்
            வெளிச்சம் கட்டளையிடும்.

2.         பொய்ப் போதகத்தில் உழன்று
            சீர்கெட்டுப்போன மாந்தர்க்கு
            மெய்ஞ்ஞானம் நெஞ்சில் தோன்றவே
            உணர்த்தும் குருநாதரே.

3.         காணாமல் போன பாவியை
            அன்பாய் நீர் தேடி அவனை
            உம்மண்டையில் சேர்த்தருளும்,
            இனி கெடாமல் ரட்சியும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...