ஸ்வாமி மழையின்றியே


315. Heinlein, Weber                 7s.

"Famine"

1.         ஸ்வாமி, மழையின்றியே
            வெண்கலம்போல வானமே
            மா கடினம் ஆயிற்று,
            பூமியெங்கும் காய்ந்தது.

2.         ஏரி, குளம், ஆறுகள்
            எங்குமுள்ள ஜீவன்கள்
            யாவும் மாரிக்காகவே
            சால ஏங்குகின்றதே.

3.         பச்சை எல்லாம் காய்ந்தது
            பயிர் எல்லாம் தீய்ந்தது,
            அகவிலை ஏறிற்று
            அப்பம் குறைவாயிற்று.

4.         மாந்தர் கொடும் பசியால்
            வாடிப் பலவீனத்தால்
            தொய்ந்து தொய்ந்து போகிறார்
            நித்தம் நித்தம் சாகிறார்.

5.         உம்மை அன்றி, பஞ்சத்தை
            நீக்கி எங்கள் பசியை
            தீர்க்கும் ஜீவ தாரகர்
            இல்லை, நீரே ரட்சகர்.

6.         தயவுள்ள தேவனே,
            யேசுவின் நிமித்தமே
            மேகத்துக்குக் கற்பியும்,
            சோனாமாரி பொழியும்.

7.         அதால் பூமி குளிரும்
            நிலம் பலனைத் தரும்,
            தேசம் எங்கும் செழிக்கும்,
            எல்லாம் உம்மைத் துதிக்கும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு