சின்ன பரதேசி
308. North Coates, Eudoxia,
St. Alban 6s,
5s.
"I'm a little pilgrim"
1. சின்ன
பரதேசி
மோட்சம் நாடினேன்;
லோகத்தின் சிற்றின்பம்
வெறுத்து விட்டேன்.
2. முத்தி அடைந்தோரை
பாவம் சேராதே;
துக்க சத்தம் அங்கே
என்றும் கேளாதே.
3. சின்ன பரதேசி
இங்கே சீர்ப்படேன்;
அங்கே வெள்ளை அங்கி
தரித்துக் கொள்வேன்.
4. என்னைச் சுத்தமாக
காரும், யேசுவே;
தினம் வழி காட்டும்,
தேவ ஆவியே.
5. சின்ன பரதேசி
பாவத்தை விட்டேன்;
என்றும் மோட்ச வாசி
ஆகப் போகிறேன்.
Comments
Post a Comment