கர்த்தாவே உம்மைத் துதிப்பேன்


231. Laudate Dominum; Yoheleth 

Luther.            8, 7, 8, 7, 8, 8, 7.

"Sei Lob und Ehr dern hochsten..."

1.         கர்த்தாவே, உம்மைத் துதிப்பேன்
                   மகா மகிழ்ச்சியாக,
            என்றைக்கும் உம்மைப் போற்றுவேன்
                        உத்தம பணிவாக;
            என் ஆவியும் என் தேகமும்;
            உம்மை நன்றாகத் துதிக்கும்;
                        கர்த்தாவுக்கே புகழ்ச்சி!

2.         அதேனெனில், என் துன்பத்தில்
                        கர்த்தாவைக் கெஞ்சிக் கொண்டேன்
            அப்போது ஏற்ற வேளையில்
                        மகா ரட்சிப்பைக் கண்டேன்;
            எல்லாரும் இதைக் கேளுங்கள்,
            என்னோடு கூடப் பாடுங்கள்;
                        கர்த்தாவுக்கே புகழ்ச்சி!

3.         கர்த்தர் ஓர்போதும் தமது
                        ஜனத்தைக் கைவிடாரே;
            கண்ணோக்கி ஆசீர்வதித்து
                        சகாயம் அளிப்பாரே;
            இருளில் இடற ஒட்டார்,
            பிதாவைப் போலத் தாங்குவார்;
                        கர்த்தாவுக்கே புகழ்ச்சி.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு