இமால்ய மலையேறி
263. Missionery Hymn (421) 7s, 6s, 8l
"India's coral strand"
1. இமால்ய
மலையேறி
தேசாந்தம் நோக்குமேன்,
வங்காளக்கடல் தாண்டி,
மேற்றிசை வாருமேன்;
எத்தனையோ அநேகர்
விக்ரக பக்தியால்
இழுப்புண்டு போனார்கள்
மெய்யறிவின்மையால்.
2. இச்செல்வ தேசம் யாவும்
மா செழிப்பாயினும்,
நற் புஷ்பச் செடி எங்கும்
சுகந்தம் வீசினும்;
ஐயோ! நரரின் நெஞ்சு
துர்க்கந்த முற்றதால்
சாத்தான் வலையில் வீழ்ந்து
மாள்வாரே பாவத்தால்.
3. நாஸ்திகம், லோக ஞானம்,
விக்ரக பக்தியும்
புராண நம்பிக்கையும்
அவபக்தியுமே
நிர்மூலமாக்கி, நல்ல
ப்ரகாசம் காட்டுவீர்,
கர்த்தாவே நீரே வல்ல
மெய் வேதம் ஸ்தாபிப்பீர்.
4. ஐரோப்பா ஆசியாவும்
ஆப்ரிக்கா கண்டமும்
எத்திசை தேசம் யாவும்
பூலோகம் அனைத்தும்
இம்மானுவேலைச் சேரும்
சுதந்த்ர சொந்தமாய்;
யேசுவின் மார்க்கம் நிற்கும்
மகா ப்ரபல்யமாய்.
5. யேசுவினாலுண்டான
நற்செய்தி பாடுவோம்;
பேரன்பின் மகத்தான
ரட்சிப்பைக் கூறுவோம்;
பூலோக மெங்குமாக
பேரொளி வீசவே,
யேசுவே, ராஜாவாக
வந்தர சாள்வீரே
Comments
Post a Comment