இயேசுவே அழைக்கிறார்


304. Invitation, Duncan         7, 5, 7, 5, 7, 7, 7, 5.

"Jesus calls"

1.         யேசுவே அழைக்கிறார்
                   வா, - வா, - பிள்ளையே;
            ஏழை உன்னை ரட்சிப்பார்,
                        வா, - வா, - பிள்ளையே;
            தேவன் மனுவாகினார்,
            உன்னைப் போல பிறந்தார்,
            தயவாய் அழைக்கிறார்;
                        வா, - வா, - பிள்ளையே.

2.         சிலுவை சுமந்தவர்
                        வா, - வா, - பிள்ளையே;
            உன்னை மீட்ட ரட்சகர்,
                        வா, - வா, - பிள்ளையே;
            திவ்ய ரத்தம் சிந்தினார்,
            அதால் உன்னை ரட்சிப்பார்,
            திருக்கையில் ஏந்துவார்;
                        வா, - வா, - பிள்ளையே.

3.         மோட்ச வீட்டில் ஏற்றுவார்,
                        வா, - வா, - பிள்ளையே;
            பொற் கிரீடம் சூட்டுவார்,
                        வா, - வா, - பிள்ளையே;
            துன்பம், துக்கம் அடையாய்,
            பாவம் நீங்கிக் களிப்பாய்
            யேசுவோடும் வாழுவாய்;
                        வா, - வா, - பிள்ளையே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு