31 October 2018

வாரம் முற்றும் சேமமாய்


299. Morning, Dix. 

Spanish Hymn.                                               7s, 6l.

"Safety through another week"

1.         வாரம் முற்றும் சேமமாய்
            தேவன் காத்தார் தயவாய்;
            ஆலயத்திற் கூடுவோம்
            வேதங் கேட்டு வாழ்த்துவோம்
            வாரத்தில் மேலானதே,
            மோட்சங் காட்டும் நாள் இதே.

2.         யேசு நாதர் ரத்தத்தால்
            நீதியை நாம் பெற்றதால்
            நேசர் அவர் நாமத்தில்
            கூடி வேதங் கேட்கையில்
            லோக வேலை விட்டோய்வோம்,
            வாஞ்சையோ டாராதிப்போம்.

3.         தேவ ஆவி அருளால்
            தேவ அன்பைக் காண்பதால்
            ஆவலாகப் போற்றுவோம்;
            தேவ சாயல் ஆகுவோம்
            மோட்சவீட்டின் வாழ்விலே
            வாழ்வோமாக பாலரே.

4.         மாசிலா யெருசலேம்
            நாம் வசிக்கும் ஆலயம்,
            நீதி அங்கி பெற்றதால்
            ஜோதியுள்ளோர் யேசுவால்
            வாரம் தோறும் பாடுவோம்,
            வேதம் ஓதிப் போற்றுவோம்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...