26 October 2018

சீர் கெட்ட லோகமே


226. St. Geroge (Gauntlett) - Clifton                                   S.M.    

"Was fag ich nach der Welt"

1.         சீர் கெட்ட லோகமே
                        உன் வாழ்வு எனக்கேன்?
            என் ரட்சகர் என் கதியே,
                        நான் உன்னைச் சார்வதேன்?

2.         என் ஆஸ்தி யேசு தான்,
                        என் செல்வம் அவரே;
            உன் மேன்மை அற்பகுப்பைதான்,
                        சீர் கெட்ட லோகமே.

3.         என் யேசுவைச் சார்வேன்,
                        விண் நன்மை நிற்குமே;
            உன்னில்யாதொன்றையும் நம்பேன்
                        சீர் கெட்ட லோகமே.

4.         ஓர் நிமிஷத்திலே
                        உன் வாழ்வு அழியும்;
            என் சாவு வரும் நாளிலே
                        மகிழ்ச்சி முடியும்.

5.         ஆனாலும் வாழுவேன்,
                        என் வாழ்வு யேசுவே;
            உன் செல்வத்தைநான் வெறுப்பேன்
                        சீர்கெட்ட லோகமே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...