26 October 2018

அற்ப வாழ்வை வாஞ்சியாமல்

ஞாபா:223

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

223. Avingnon, Cairus                                                         8, 8, 8, 6.

 

"Seek ye first, not earthly pleasure"

 

1.       அற்ப வாழ்வை வாஞ்சியாமல்;

            இன்பம், செல்வம் பின்பற்றாமல்

            தேவ நேசத்தை ஓயாமல்

                        நாடுவாய், நாடுவாய்.

 

2.         விரும்பாதே பேர்ப்ரஸ் தாபம்

            லோக மகிமைப்ர தாபம்

            ஆத்ம வாழ்வின் நித்ய லாபம்

                        நாடுவாய், நாடுவாய்.

 

3.         நாடுவாய் தேவாசீர் வாதம்;

            கர்த்தர் ஈயும் சற்பிர சாதம்;

            பாவம் தீரத் திருப்பாதம்

                        நாடுவாய், நாடுவாய்.

 

4.         மீட்பர்போல் சுத்தாங்கமாக,

            தாழ்மையோடு சாந்தமாக

            தொண்டு செய்ய ஆவலாக

                        நாடுவாய், நாடுவாய்.

 

5.         பிறர் யேசுவண்டை சேர;

            அவராலே கடைத்தேற;

            தேவ சித்தம் நிறைவேற

                        நாடுவாய், நாடுவாய்.

 

6.         அருள்நாதர் அரசாளும்

            காலம் வந்து சர்வத்ராளும்

            மீட்பைக் காணவும் எந்நாளும்

                        நாடுவாய், நாடுவாய்.

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...