விண் வாசஸ்தலமாம்


288. The Blessed Home.                                           (427)   6s, 8s.

"There is a blessed Home"

1.         விண் வாசஸ்தலமாம்
                        பேரின்ப வீடுண்டே;
            கிலேசம் பாடெல்லாம்
                        இல்லாமல் போகுமே;
            காணாதவைகளை
                        கண்ணாலே நோக்குவோம்,
            விண் ஜோதி மகிமை
                        அடைந்து பூரிப்போம்.

2.         தூதர் ஆராதிக்கும்
                        பேர் வாழ்வின் நாடதாம்;
            அங்கே ஆர்த்தொலிக்கும்
                        ஓயாத கீதமாம்;
            த்ரியேகர் ஜோதியாய்
                        ப்ரசன்னமாகுவார்;
            தூயோர் மா திரளாய்,
                        “வாழ்க”! என்றேத்துவார்.

3.         தேவாட்டுக் குட்டியின்
                        கை கால் விலாவிலே
            ஐங் காயம் நோக்கிடின்,
                        பேரின்பம் பொங்கிடும்;
            வென்றேறச் செய்ததால்
                        அன்போடு சேவிப்போம்,
            பேர் நன்மை தந்ததால்
                        என்றைக்கும் போற்றுவோம்.

4.         துன்புற்ற பக்தரே,
                        விண் வீட்டை நாடுமேன்;
            தொய்யாமல் நித்தமே
                        முன் சென்று போகுமேன்;
            இத்துன்பம் மாறுமே,
                        மேலோக நாதனார்
            நல் வார்த்தை சொல்லியே
                        பேரின்பந் தருவார்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு