30 October 2018

ஆ இயேசுவே உம்மாலே

ஞாபா:252

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

252. Dies, Dominica - Day of Rest                                       7s, 6s, 8l

 

                                    "O Jesu, meine Wonne"

 

1.       ஆ யேசுவே, உம்மாலே

                        நான் மீட்கப்பட்டேனே;

            உமது நீதியாலே

                        நான் சுத்தமானேனே;

            மிகுந்த கஸ்தியாலே

                        என் குற்றத்தைத் தீர்த்தீர்;

            உமது சாவினாலே

                        நீர் என்னை ரட்சித்தீர்.

 

2.         நான் உம்மால் என்றும் வாழ,

                        இப்பந்தியில் நீரே

            என் ஆவிக்கேற்றதான

                        அமிர்தம் தந்தீரே;

            அன்போடு என்னைச் சேர்த்து,

                        இரக்கம் காண்பியும்;

            என் குற்றத்தைப் பொறுத்து

                        மன்னிப்பை அருளும்.

 

3.         நீர் இன்னும் என்னில் காணும்

                        பொல்லாங்கு யாவையும்

            அகற்றிப்போட வாரும்

                        என்றைக்கும் ரட்சியும்;

            நான் உம்மைப் பற்றிக்கொள்ள

                        நீர் என்னை ஏவுமேன்;

            மிகுந்த தாழ்மையுள்ள

                        மனம் உண்டாக்குமேன்.

 

4.         நல் மீட்பரே, உம்மோடு

                        நான் ஐக்யமாகவும்,

            நாடோறும் வாஞ்சையோடு

                        மிகுந்த அன்பினாலே

            துணை செய்தே இரும்;

                        துணை செய்தருளும்;

            தெய்வீக அப்பத்தாலே

                        நீர் என்னைப் போஷியும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...