எப்போதும் இயேசு நாதா
207. Days of Rest 7s,
6s, 8l.
"O Jesus, I have promised"
1. எப்போதும்,
யேசு நாதா,
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்குக் கொடுத்தேன்;
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்,
அப்போது அஞ்சிடேன்;
முன் சென்று பாதை காட்டும்,
நான் வழி தவறேன்.
2. பூலோக இன்பம் செல்வம்,
வீண் ஆசாபாசத்தால்,
என் ஆத்துமா மயங்காமல்;
தெய்வீக பலத்தால்
நீர் துணை நின்று தாங்கும்,
என் அருள் நாயகா;
தீங்கணுகாமல் காரும்
மா வல்ல ரட்சகா.
3. ஆங்காரம் சுய சித்தம்
தகாத சிந்தையால்
மா கலக்கம் உண்டாகி
நான் தடுமாறினால்
நீர் பேசும் அருள் நாதா,
கொந்தளிப்படங்கும்;
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்.
4. "பின்பற்றினால் விண் வீட்டில்
பேரின்பம் பெறுவீர்."
என்றே உம் சீஷர் நோக்கி
நீர் வாக்கு அளித்தீர்;
அவ்வருள் வாக்கை நம்பி
இவ்வேழை அடியேன்,
"இதோ பின் செல்வேன்," என்று
ப்ரதிக்னை பண்ணினேன்.
5. ஓயாமல் பெலன் தாரும்;
உம்மடிச்சுவட்டில்
கால் வைத்து நடந்தேகி
நான் யாத்ரை செய்கையில்
நீர் வழிகாட்டி, என்னை
கைதாங்கி வருவீர்;
அப்பாலே மோட்ச வீட்டில்
பேர்
வாழ்வை அருள்வீர்.
Comments
Post a Comment