நன்றாய் விழிப்பவன்


237. Franconia., Carlisle, Laban                S.M.

"Watch and pray"

1.         நன்றாய் விழிப்பவன்
                   சோதனைக்குட்படான்
            விழிப்பில்லா திருப்பவன்
                        தீமைக்கு ஆளாவான்.

2.         ஏவாள் ஓர் கனியை
                        புசித்த தாலேயே
            கர்த்தாவின் சாப ஆக்கினை
                        மாந்தர்க்கு வந்ததே.

3.         அத்தன்மையாய் நானும்
                        விழிப்பில்லாமலே
            பொல்லாங்கைச் செய்தால், என்றைக்கும்
                        சாகாமல் சாவேனே.

4.         நான் இதை எண்ணினால்,
                        என் தேகம் ஆவியும்
            பயம் அடைந்து எங்கலால்
                        அதிர்ந்து நடுங்கும்.

5.         அன்புள்ள யேசுவே,
                        என்மேல் இரங்குமேன்,
            நான் உம்மைப்போல் விழிக்கவே
                        சகாயம் பண்ணுமேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு