இயேசு எங்கள் மேய்ப்பர்


298. Goshen. 

Mary Magdalene                                          6s, 5s, 8l.

"Jesus is our Shepherd"

1.        யேசு எங்கள் மேய்ப்பர்,
                        கண்ணீர் துடைப்பார்,
            மார்பில் சேர்த்தணைத்து
                        பயம் நீக்குவார்;
            துன்பம் நேரிட்டாலும்,
                        இன்பம் ஆயினும்,
            யேசுவின் பின் செல்வோம்
                        பாலர் யாவரும்.

2.         நல்ல மேய்ப்பர் சத்தம்
                        நன்றாய் அறிவோம்,
            காதுக்கின்பமாக
                        கேட்டுக் களிப்போம்;
            கண்டித்தாலும், நேசர்
                        ஆற்றித் தேற்றுவார்
            நாங்கள் பின்னே செல்ல
                        வழி காட்டுவார்.

3.         ஆட்டுக்காக மேய்ப்பர்
                        ரத்தம் சிந்தினார்,
            அதில் மூழ்கினோரே
                        தூயர் ஆகுவார்;
            பாவ குணம் நீக்கி
                        முற்றும் ரட்சிப்பார்;
            திவ்ய தூய சாயல்
                        ஆக மற்றுவார்.

4.         யேசு நல்ல மேய்ப்பர்
                        ஆட்டைப் போஷிப்பார்;
            ஓநாய்கள் வந்தாலும்,
                        தொடவே ஒட்டார்;
            சாவின் பள்ளத்தாக்கில்
                        அஞ்சவே மாட்டோம்
            பாதாளத்தின் மேலும்
                        ஜெயங் கொள்ளுவோம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு