26 October 2018

என் நெஞ்சை சுவாமி உமக்கே


219. Emmaus St. Flavian - Arcadia                                     C.M.

"Mein Gott, das Herz ich bringe dir"

1.          என் நெஞ்சை, சுவாமி, உமக்கே;
                        இதோ! படைக்கிறேன்;
            நீர் இந்தக் காணிக்கையையே
                        கேட்டீர் என்றறிவேன்.

2.         என் மகனே உன் நெஞ்சைத்தா
                        என் றன்பாய்க் கேட்கிறீர்;
            நீர் மீட்டதால், என் ஆண்டவா
                        உம் சொந்தம் என்கிறீர்.

3.         பிதாவே, அதைத் தயவாய்
                        அங்கீகரிக்கவும்,
            நான் அதை உள்ள வண்ணாய்
                        தந்தேன் தள்ளாதிரும்.

4.         என் முழு நெஞ்சையும் அன்பாய்
                        சுவாமி நீர் என்றைக்கும்
            அகமும் ஆலயமுமாய்
                        ஏற்றுக்கொண்டருளும்.

5.         நீர் அதை ஆளும், கர்த்தரே,
                        அதால் நான் பாக்கியன்;
            நான் உலகத்தான அல்லவே,
                        நான் உம்முடையவன்.

6.         போ! லோகமே! போ! பாவமே!
                        என் நெஞ்சை அடியேன்
            உமக்கே என்றும் யேசுவே,
                        கொடுத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...